Annual Competitions (2025 – 2026) – Registration form

Welcome to Tamil School Annual Competition event 2025-2026

We are pleased to invite parents to our Annual school competitions age-wise event on May 2nd, 2026 (Saturday), at 40 Astral Street, Warwick, RI. To ensure your child’s participation in one or more competitions, please complete the registration form below. We look forward to seeing you on this special day of competitions.

'முன்மழலை' மட்டும் – மழலைப்பாடல்கள் போட்டி

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • 'முன்மழலை' போட்டிக்கான மழலைப்பாடல்கள்

அவர்கள் படைப்பாற்றலுடன் வர வேண்டும். (ஆடை அலங்காரமும் படைப்பு விளக்கமும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.)

 

பேச்சுப் போட்டி

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • உங்களுக்குத் தெரிந்த சுட்டிக்கதை ஒன்றை கூறுக!

கால அளவு: 2 Mins

 

சொல் விளையாட்டு - தமிழ்ச் சொல் தேடல்

போட்டி விதிமுறைகள்

Guidelines

படங்களைப் பார்த்து கண்டுபிடித்து சொல்லுதல்

 

Identify the image by looking at it (oral)

● பாடப்புத்தகம் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் படங்களைகாண்பித்து, வார்த்தைகள் கேட்கப்படும்.

● ஒரு படத்திற்கான சரியான பதிலைஒரு நிமிடத்திற்குள் சொல்ல வேண்டும்.

● Images will be from their textbooks and objects used daily.

● Give the correct answer to a picture within a minute.

 

திருக்குறள் போட்டி

Topic

Guidelines

அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து (10)

Judges will ask a specific number of kurals to each Participant with the starting word of the kural.

 

செய்யுள் போட்டி

Topic

Guidelines

ஆத்திச்சூடி முதல் 13 வரிகளில் ஏதேனும்   10 வரிகளை கூறினால் போதும்

Participants have to say any 10 lines from the first 13 lines (see below)

 

ஆத்திசூடி

உயிர் வருக்கம்

1.       அறம் செய விரும்பு.

2.       ஆறுவது சினம்.

3.        இயல்வது கரவேல்.

4.        ஈவது விலக்கேல்.

5.        உடையது விளம்பேல்.

6.        ஊக்கமது கைவிடேல்.

7.        எண் எழுத்து இகழேல்.

8.        ஏற்பது இகழ்ச்சி.

9.        ஐயம் இட்டு உண்.

10.   ஒப்புரவு ஒழுகு.

11.   ஓதுவது ஒழியேல்.

12.   ஔவியம் பேசேல்.

13.   அஃகஞ் சுருக்கேல்.

பேச்சுப் போட்டி

போட்டி தலைப்புகள்

Guidelines

  • உங்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த தலைப்பில் மூன்று நிமிடம் பேசுக! Or
  • உங்களுக்கு பிடித்த வண்ணத்தைப் பற்றி மூன்று நிமிடம் பேசுக

கால அளவு: 3 Mins

 

சொல் விளையாட்டு - தமிழ்ச் சொல் தேடல்

போட்டி விதிமுறைகள்

Guidelines

சரியான படங்களின் பெயரைகண்டுபிடிக்க வேண்டும்.

 

பாடப்புத்தகம் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் படங்களை கேள்விகளாக கேட்கப்படும்.

படத்தை அடையாளம் காணவும்; கேள்விகள் பின்வரும் வடிவங்களில் அமையும்:

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

பொருத்துக

கோடிட்ட இடங்களை நிரப்புக

 Identify the image

formats 

1. choose the correct answer.

2. Match the following

3. Fill in the blanks

 

திருக்குறள் போட்டி

Topic

Guidelines

அதிகாரங்கள்அன்புடைமை (10)

-            வான் சிறப்பு (5)

 

Judges will ask a specific number of kurals to each Participant with the starting word of the kural.

 

செய்யுள் போட்டி

Topic

Guidelines

ஆத்திச்சூடி முதல் 14- 31 வரிகளில் ஏதேனும்   15 வரிகளை கூறினால் போதும்

Participants have to say 15 lines from the given 14-31 lines (see below)

 

ஆத்திசூடி

     உயிர்மெய் வருக்கம்

1.       கண்டொன்று சொல்லேல்.

2.        ஙப் போல் வளை.

3.        சனி நீராடு.

4.        ஞயம்பட உரை.

5.        இடம்பட வீடு எடேல்.

6.        இணக்கம் அறிந்து இணங்கு.

7.        தந்தை தாய்ப் பேண்.

8.        நன்றி மறவேல்.

9.        பருவத்தே பயிர் செய்.

10.   மண் பறித்து உண்ணேல்.

11.   இயல்பு அலாதன செய்யேல்.

12.   அரவம் ஆட்டேல்.

13.   இலவம் பஞ்சில் துயில்.

14.   வஞ்சகம் பேசேல்.

15.   அழகு அலாதன செய்யேல்.

16.   இளமையில் கல்.

17.   அறனை மறவேல்.

18.   அனந்தல் ஆடேல்.

பேச்சுப் போட்டி

போட்டி தலைப்புகள்

Guidelines

  • பள்ளிக்கூடம் எப்படியாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்புகின்றனர்? (or)
  • ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

கால அளவு: 3 to 5 Mins

 

சொல் விளையாட்டு (இரண்டு பகுதிகள் - கால அளவு – 60 mins )

பகுதி 1 - சொல் உருவாக்கம் (Word formation)

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • மாணவர்கள் தமிழ் வார்த்தைகளை

கட்டங்களில்  கொடுக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை  வைத்து கண்டுபடித்து சொல்ல வேண்டும்.

  • மாணவர்கள் குறைந்தபட்சம் 15

வார்த்தைகளும், அதகபட்சம் 30

வார்த்தைகளும் கண்டுபடிக்க வேண்டும்

நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.

போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.

 

பகுதி 2 - ஆங்கில வாக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து சொல்லவும் (sentence translation)

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • வாக்கயங்கள், மாணவர்களின்

பாடப்புத்தகத்தலும் மற்றும் பொதுவாகவும்

கேட்கப்படும்.

  • போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு

மாணவர்களிடமும் தனித்தனியாக 15

ஆங்கில வாக்கியங்கள் கேட்கப்படும்.

அவர்கள் அதை தமிழில் மொழி பெயர்த்து சொல்ல வேண்டும்.

நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.

போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது

 

 

 

திருக்குறள் போட்டி

Topic

Guidelines

அதிகாரங்கள்ஈகை (10)

வாய்மை (10)



Judges will ask a specific number of kurals to each Participant with the starting word or the ending word of the kural.

 

செய்யுள் போட்டி

Topic

Guidelines

முதுமொழிக்காஞ்சியில் (அறிவுபத்தில்) உள்ள பத்து பாடல்களையும் அதன் விளக்கத்தையும் சொல்ல வேண்டும்

Participants have to say 10 songs. Meaning is optional.

 

முதுமொழிக் காஞ்சி

அறிவுப்பத்து

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப

விளக்கம்:

கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப

விளக்கம்:

ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.

3. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப

விளக்கம்:

ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.

4. கற்றது உடைமை காட்சியின் அறிப

விளக்கம்:

ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.

5. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப

விளக்கம்:

ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப

விளக்கம்:

சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.

7. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப

விளக்கம்:

ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.

8. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப

விளக்கம்:

சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.

9. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப

விளக்கம்:

ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.

10. சீருடை யாண்மை செய்கையின் அறிப

விளக்கம்:

ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர்.

பேச்சுப் போட்டி

போட்டி தலைப்புகள்

Guidelines

  • காடுகள் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? (or)
  • இன்றைய இளைஞர்கள் விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

கால அளவு: 5 Mins

 

சொல் விளையாட்டு (இரண்டு பகுதிகள் - கால அளவு – 60 mins )

பகுதி 1 - ஆங்கில சொற்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும் (word translation)

 

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • 25 சொற்கள் வழங்கப்படும்.
  • எழுத்துப் பிழை இல்லாமல் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்
  • 100 சொற்கள் கொண்ட ஒரு பட்டியல் வழங்கப்படும்.

 

நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும். போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது

 

எடுத்துக்காட்டு:

Internet – இணையம்

 

பகுதி 2 - ஆங்கில வாக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும் (sentence translation)

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • 15 வாக்கியங்கள் வழங்கப்படும்.
  • மொழிபெயர்ப்பு சரியான காலங்களில் (Tenses) இருக்க வேண்டும்.
  • எழுத்துப் பிழை இல்லாமல் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.
  • நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.
  • போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது .

எடுத்துக்காட்டு:

She Came

அவள் வந்தாள்சரி

அவள் வருகிறாள்  தவறு

 

 

திருக்குறள் போட்டி

Topic

Guidelines

அதிகாரங்கள்அருளுடைமை (10)

புறங்கூறாமை (10)



Judges will ask a specific number of kurals to each Participant with the starting word or the ending word of the kural.

                                                                                                                

சொல் தேடல் (Team game – team size – 2)

Format

ஒரு வார்த்தை ஒரு லட்சம் வடிவத்திலான போட்டி.

Find word using clue words.

Team size

Team of 2 can be of any age from 11+

Questions

 Words maybe of varying difficulty levels and will be randomly selected for a team

Time

Find 5 words in 60sec per turn.

Rounds

In each round, each team will get a set of 5 words. Typical contest will have 2 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing.

Scoring

Each right answer will gain 1 point. Team with max point will be the winner. Judges will make the final call on proper use of the clue words.

Tie-Breaker

If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or add bonus points for forming a sentence using the word in the same allotted time.

Sample

5 words per turn: அடுப்பு அண்ணி அதிரசம் அப்பளம் அசல்

 

செய்யுள் போட்டி

Topic

Guidelines

இனியவை நாற்பது செய்யுளிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள   3 பாடல்களிலிருந்து   ஏதேனும் 2 பாடல்களையும் அதன் விளக்கத்தையும் சொல்ல வேண்டும்.

Participants have to say any 2 out of given 3 songs (see below)

 

இனியவை நாற்பது

பாடல் - 01

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. . . . .[01]

விளக்கம்:

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல் - 02

சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. . . . .[20]

விளக்கம்:

வஞ்சகரைச் சாராமல் அவர்களது தொடர்பை விட்டு விடுவது இனியது. கற்றறிந்த அறிவுடையாருடைய வாய்ச் சொற் களைப் போற்றி அதன்படி நடப்பது இனியது. அகன்ற இடத்தையுடைய இப்பூமியில் வாழ்கின்ற எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ்வது இனியது.

பாடல் - 03

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். . . . .[30]

விளக்கம்:

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

பேச்சுப் போட்டி

போட்டி தலைப்புகள்

Guidelines

  • 1.   எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தின் பங்கு என்ன? (or)
  • 2.    உங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கால அளவு: 5 Mins

 

சொல் விளையாட்டு (இரண்டு பகுதிகள் - கால அளவு – 60 mins )

பகுதி 1 - ஆங்கில சொற்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும் (word translation)

 

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • 25 சொற்கள் வழங்கப்படும்.
  • எழுத்துப் பிழை இல்லாமல் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.
  • 100 சொற்கள் கொண்ட ஒரு பட்டியல் வழங்கப்படும்.
  • நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.
  • போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது

எடுத்துக்காட்டு:

Internet – இணையம்

 

பகுதி 2 - ஆங்கில வாக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும் (Sentence translation)

 

போட்டி விதிமுறைகள்

Guidelines

  • 15 வாக்கியங்கள் வழங்கப்படும்.
  • மொழிபெயர்ப்பு சரியான காலங்களில் (Tenses) இருக்க வேண்டும்.
  • எழுத்துப் பிழை இல்லாமல் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.
  • நடுவர் குழுவின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.

போட்டி நடைபெறும் போது கைபேசி, புத்தகங்கள், குறிப்புகள் போன்ற உதவிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது .

எடுத்துக்காட்டு:

I studied the lesson

நான் பாடம் படித்தேன்சரி

நான் பாடம் படிப்பேன்தவறு

நான் பாடம் படிக்கிறேன்தவறு

 

 

திருக்குறள் போட்டி

Topic

Guidelines

அதிகாரங்கள்இனியவை கூறல் (10)

பொறையுடைமை (10)



Judges will ask a specific number of kurals to each Participant with the starting word or the ending word of the kural. Students need to recite the kural along with its meaning.

 

சொல் தேடல் (Team game – team size – 2)

Format

ஒரு வார்த்தை ஒரு லட்சம் வடிவத்திலான போட்டி.

Find word using clue words.

Team size

Team of 2 can be of any age from 11+

Questions

 Words maybe of varying difficulty levels and will be randomly selected for a team

Time

Find 5 words in 60sec per turn.

Rounds

In each round, each team will get a set of 5 words. Typical contest will have 2 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing.

Scoring

Each right answer will gain 1 point. Team with max point will be the winner. Judges will make the final call on proper use of the clue words.

Tie-Breaker

If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or add bonus points for forming a sentence using the word in the same allotted time.

Sample

5 words per turn: அடுப்பு அண்ணி அதிரசம் அப்பளம் அசல்

 

செய்யுள் போட்டி

Topic

Guidelines

நாலடியார் செய்யுளிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள   4   பாடல்களிலிருந்து   ஏதேனும் 3 பாடல்களையும் அதன் விளக்கத்தையும் சொல்ல வேண்டும் (see below)

Participants have to say any 3 out of given 4 songs (see below)

 

நாலடியார்

கல்வி-   பாடல் : 135

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பொருளுரை:

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.

மேன் மக்கள் -  பாடல் : 152

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?

பொருளுரை:

விரைவோடு நா¢யின் மார்பைப் பிளந்து சென்ற அம்பைவிட, சிங்கத்தை நோக்கிவிடப்பட்ட குறி தவறிய அம்பு உயர்ந்ததாகும். அதனால் முடிந்தாலும் முடியாவிட்டாலும் சான்றோர் பழியற்ற செயல்களையே எண்ணிச் செய்வர்.

அறிவுடைமை -  பாடல் : 248

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

பொருளுரை:

நல்ல நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து).

பொறையுடைமை-  பாடல் : 076

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

பொருளுரை:

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

Scroll to Top