About us

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
– மாகவி சுப்பிரமணிய பாரதியார்.

ரோடு ஐலேண்ட் தமிழ்ப்பள்ளி 2017 ஆம் ஆண்டில் தன்னார்வ அடிப்படையிலான, பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற (501-(c)(3) தமிழ்க் கல்விக்கான அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்து வந்து, ஆங்கிலத்தை முதன்மையாகக் கொண்டு வாழும் நம் குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழியான தமிழை கற்க, எழுத மற்றும் சரளமாக பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வழங்குவதற்கும், மேலும் நம் குழந்தைகள் தொன்மையான தமிழ் மொழியை கற்பதின் அவசியத்தையும், தமிழர் வரலாறு, கலைகள், பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

2017 ஆம் கல்வியாண்டு 55 மாணவர்களைக் கொண்டு கலிபோர்னியா தமிழ் அகாடமியின் பதிவு செய்யப்பட்டு அதன் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி தரமான தமிழ்க் கல்வியை, மாணவர்களின் பல்வேறு வயது மற்றும் அறிவு நிலைக்கு ஏற்ப தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. குழந்தைகள் தமிழைக் கற்பதிலும், புரிந்துகொள்வதிலும் சிறந்து விளங்க உதவுவதில் மெதுவாக ஆனால் சீராக கவனம் செலுத்தத் தொடங்கினோம். பின் 2018 ஆம் கல்வியாண்டு முதல் அமெரிக்கன் தமிழ் அகாடமியில் பதிவு செய்யப்பட்டு அதன் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி தரமான தமிழ் கல்வி இன்று வரை வகுப்புகள் நடைபெற்ற வருகின்றது.

நம் பள்ளியில் தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும். மழலை முதல் நிலை 8 வரை வகுப்புகள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக, தன்னார்வலர்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் மாணவர்களுக்கு தமிழை கற்பிக்க அர்ப்பணித்து வருகின்றனர். தமிழ் வழிக்கல்விக்கான தேவை அதிகரித்து வருவதால், தமிழ் பள்ளியில் தற்பொழுது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதின் மூலம், தமிழ் கல்வியின் அவசியமும், தமிழ் பள்ளியும் வளர்ந்துள்ளது.

நம் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பதுடன் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பேச்சுப் போட்டிகள், கலைப்போட்டிகள், மாணவர்களின் கைப்பொருள் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார விழாக்கள் நிகழ்த்தப்படுகின்றன.

நோக்கம்:

நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத் தருவதுடன், நல்ல, தரமான தமிழ்மொழிக் கல்வியை கற்பதை வளர்க்க வேண்டும். மேலும் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதன் மூலம் அவர்களுடைய அறிவு மேம்பாட்டிற்கும் (The Seal of Biliteracy) நல்வாழ்வுக்கும் வழிவகுப்பது  இப்பள்ளியின் நோக்கமாகும்